fbpx

அலாரத்தை Snooze செய்துவிட்டு தூங்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து.. ஏன் தெரியுமா..?

அதிகாலையில் எழுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.. எனவே தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் அலாரம் வைப்போம்.. ஆனால் அதிகாலையில் நமது அலாரம் அடிக்கத் தொடங்கும் போது நாம் எழுந்திருக்காமல், snooze செய்துவிட்டு மேலும் சில நிமிடங்களுக்கு நாம் தூங்குவோம்.. பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் பொதுவான விஷயம் இது… 3 பேரில் ஒருவர் காலையில் எழுவதர்கு முன் snooze பட்டனை 3 முறை அழுத்துவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. snooze பட்டனை அழுத்துவதன் மூலம் சில கூடுதல் நிமிடங்கள் தூங்குவது தீங்கு விளைவிக்காது. இருப்பினும், இது பகலில் நம்மை அதிகம் சோர்வடைய செய்யும் என்று தூக்க நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..

snooze பட்டனை அடிக்கடி அழுத்துவதால், தூக்கத்திற்குப் பிறகும் நமது உடல் சோர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. பலர் காலையில் 4 முதல் 6 முறை snooze பட்டனை அழுத்துகின்றனர்.. இது ஆழ்ந்த உறக்கத்திற்கு திரும்புவதற்கு நமது மூளைக்கு போதுமான நேரத்தை கொடுக்காது.. இதன் விளைவாக, நமது இயல்பான உறக்கத்தின் கடைசி 30 நிமிடங்கள் அல்லது 1 மணிநேரம் வீணாகிறது. மாறாக, நீங்கள் எழுந்திருக்க வேண்டிய கடைசி நேரத்தில் அலாரத்தை அமைக்க முயற்சிக்கவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்..

இதே போல் மற்ற ஆய்வுகள் காலை அலாரம் அடித்தவுடன் நமது உடலின் உள் கடிகாரம் எழுந்திருக்க தயாராகிவிடும் என்று கூறுகின்றன. இருப்பினும், வழக்கமான இடைவெளியில் snooze பட்டனை அழுத்துவதன் மூலம், நம் உடல் கடிகாரத்தை குழப்பிவிடுகிறோம். இதையொட்டி, கடைசி மணிநேர தூக்கத்தின் தரம் குறைவாக உள்ளது. அரை குறையான தூக்கத்தின் நீண்டகால விளைவுகள் எதிர்மறையாக இருக்கலாம், ஏனெனில் மோசமான அல்லது முழுமையடையாத தூக்கம் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் சில நொடிகள் தூங்க வேண்டும் என்ற ஆசையால் மீண்டும் மீண்டும் snooze பட்டனை அழுத்துவது சோர்வான காலையை ஏற்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்று தூக்க நிபுணர்கள் நம்புகிறார்கள். snooze பட்டன் உங்கள் தூக்கத்தைக் கெடுப்பது மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், snooze பட்டனை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. Loughborough பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இரண்டு வருட ஆராய்ச்சியின் படி, இது உடலின் இயற்கையான கடிகாரத்தின் இயற்கையான தாளத்தை சீர்குலைப்பதால், இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, இது மிகவும் ஆபத்தானது.

Maha

Next Post

கருணாநிதியாலேயே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை……! இவரால் என்ன செய்து விட முடியும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கர்ஜனை….!

Sun Mar 12 , 2023
நேற்றைய தினம் சிவகங்கையில் நடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரை எடப்பாடி பழனிச்சாமி பி டீமை வைத்து அதிமுகவை உடைக்க நினைத்தால் திமுக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார் அவர் பி.டீம் என்று மறைமுகமாக பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் கருணாநிதியாலேயே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. இவரால் என்ன செய்துவிட முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். […]

You May Like