fbpx

“அம்மா, அந்த அண்ணா, என்ன இங்க தொட்டாங்க”; சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய்..

தேனி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர். இவரது ஆறு வயதான இரண்டாவது மகள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் வீட்டருகே 14 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவனும், சிறுமியும் அடிக்கடி ஒன்றாக விளையாடுவது வழக்கம். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுவன் சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

அங்கு சிறுமிக்கு, சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். சிறுமி வலி தாங்க இயலாமல் சத்தமிட்டுள்ளார். இதனால் பதறிப்போன சிறுவன், இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டி அங்கிருந்து அனுப்பியுள்ளான். பின் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சிறுவன் செய்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனால் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதை பெற்றோர் புரிந்துகொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், இது குறித்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த அதிகாரிகள், 14 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Read More: கடற்கரையில் கேட்ட முனங்கள் சத்தம்; ஒருத்தர் பின் ஒருத்தராக சிறுமிக்கு செய்த காரியம்..

English Summary

small-girl-was-sexually-harassed-by-a-boy

Next Post

வெள்ளிக்கிழமையில் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லிப் பாருங்க..!! வறுமை நீங்கி செல்வம் பெருகும்..!!

Fri Nov 8 , 2024
Although there are 7 days in the week, Friday is the divine day.

You May Like