fbpx

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.‌‌.!

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022-23ல் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான எந்த திட்டமும் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. தற்போது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் முழுமையாக செயல்படுகின்றன என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை AIIMS, IIM, IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு “தகுதியற்றவர்கள்” என எந்த காரணமும் இன்றி வேண்டுமென்றே அறிவிக்கப்படுகிறார்கள். இது தேர்வுக் குழுக்களின் பாரபட்சம், சார்பு நிலையை வெளிக்காட்டுகிறது.

போதுமான எண்ணிக்கையில் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்ற அரசாங்கத்தின் “பொதுவான” பதிலை ஏற்க விரும்பவில்லை என மக்களவையில் SC/ST நலனுக்கான நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. மேலும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்கள் எவரும் SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, AIIMSல் உள்ள SC/ST வகுப்பினரின் வாய்ப்புகளை மேம்படுத்த, தேர்வுக்குழுவில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Vignesh

Next Post

தொல்லைதரும் ஸ்பேம் கால்!… ரூ.110 கோடி அபராதம்!… டிராய் அதிரடி!

Wed Feb 7 , 2024
தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால் மொபைல் ஆபரேட்டர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஆபரேட்டர்களுக்கு “நிதி ஊக்குவிப்பதாக” ரூ.110 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சைபர் குற்றவாளிகளால் பறிக்கப்பட்ட கிட்டத்தட்ட ரூ. 1,000 கோடி, கிட்டத்தட்ட நான்கு லட்சம் பயனர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்க உதவியதால், அரசாங்கத்தால் மீட்கப்பட்டுள்ளது. தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் மோசடியான தொலைத்தொடர்பு செயல்பாடுகளுக்கு […]

You May Like