fbpx

மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி கையால் முட்டை உரிக்க வேண்டாம்..! அரசு அதிரடி முடிவு

முட்டை உரிக்கும் நவீன எந்திரம் கொண்டு வருவதற்கு சமூக நலன் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிகாலத்தில் மாணவர்களுக்கு சத்துணவோடு முட்டை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2014 ம் ஆண்டு வாரத்தில் அனைத்து பள்ளி நாட்களிலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் பலவகை கலவை சாதம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெஜ்பிரியாணி, தக்காளி சாதம், கறிவேப்பிலை சாதம் என பலவகை கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது.

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான 20 லட்சத்து 74 ஆயிரத்து 39 மாணவர்களும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 21 லட்சத்து 97 ஆயிரத்து 914 மாணவர்களும் இதனால் பயனடைகின்றனர். இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் 43,131 சத்துணவு மையங்கள் மூலம் 5 வகையான கலவை சாதங்கள் மற்றும் மசாலா முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சத்துணவு மையங்களில் முட்டையை உரிப்பதற்கு பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இது போன்ற சிக்கல்களை தவிர்க்க முட்டை உரிக்கும் நவீன எந்திரம் கொண்டு வருவதற்கு சமூக நலன் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதால் நாள்தோறும் 500 முட்டைகளை வேக வைத்து உரிக்கும் போது முட்டைகள் வீணாகிறது. அதோடு சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே முட்டை உரிக்கும் நவீன எந்திரம் வாங்க தமிழக அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

English Summary

Social welfare department has decided to bring modern egg peeler.

Vignesh

Next Post

ரூ.300 கோடி மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...!

Fri Aug 23 , 2024
Chief Minister Stalin's order to provide Rs.300 crore to the Municipal Transport Corporation.

You May Like