fbpx

மின்சாரம் பாய்ந்த தாயை காப்பாற்றச் சென்ற மகன் பலி.! தாய் பிழைத்த சம்பவம்..!

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ள பில்லாந்திப்பட்டு கிராமத்தில் மதனவல்லி (56 வயது) வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முந்தைய தினத்தில் மாலையில் துணி துவைத்து, வீட்டின் பின்புறம் உள்ள மின்கம்பத்தில் கட்டியுள்ள கம்பியின் மீது காய வைத்துள்ளார்.

அந்த சமயத்தில், அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரது கதறல் சத்தம் கேட்கவே அவரது மகன் அசோக், 36, தாயை காப்பாற்ற வேண்டும் என அந்த கம்பியை கட்டையால் தட்டியுள்ளார். 

இதனையடுத்து கம்பி அறுந்து, அசோக் மீது விழுந்தது. அதனால் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து பெரணமல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

#திருவள்ளூர் : மகனை பறி கொடுத்த சோகத்தில் உயிரை விட்ட பெற்றோர்கள்.!

Fri Nov 18 , 2022
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் , ராமாபுரம் பகுதியில் தனசேகர் (50) தனது மனைவி பூங்கொடி (44) மற்றும் மகன் ஹரிஷ்(17), வசித்து வந்துள்ளனர். மகன் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் இருந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். மகனின் முதலாண்டு நினைவு நாள் அடுத்த மாதம் வர உள்ளது. இதனிடையே மகன் உயிரிழந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் தம்பதிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில், தனசேகரின் தாயார் […]

You May Like