fbpx

மக்களே…! பவுர்ணமி முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்து…!

பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வரும் 19-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 130 பேருந்துகளும், 19-ல் 250 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதாவரத்திலிருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.

குறிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இருக்கை, படுக்கை வசதி கொண்ட ஏசி 50 பேருந்துகள், 19-ம் தேதி இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஆக.19-ம் தேதி 265 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதன்படி, சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Special bus from today to 20th on the occasion of Poornami

Vignesh

Next Post

கிரெடிட் கார்டு..!! இந்த விஷயத்தை செய்து சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க..!!

Sun Aug 18 , 2024
Savings account and fixed deposits are sufficient for accumulating small emergency funds.

You May Like