மிகவும் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக அதி நவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை – படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மிகவும் பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரியை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக அதி நவீன சொகுசு பேருந்து மற்றும் இருக்கை – படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன
இவ்வாறு ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இச்சிறப்பு பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்..