fbpx

மக்களே…! மின்சார வாரியம் சார்பாக இன்று காலை 11 முதல் 5 மணி வரை சிறப்பு முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Special camp on behalf of the Electricity Board today from 11 am to 5 pm

Vignesh

Next Post

உடல் எடையை குறைப்பவர்களுக்கு வரப்பிரசாதம்..!! எலும்புகளுக்கு பலம் கிடைக்கும்..!! பன்னீரில் இத்தனை நன்மைகளா..?

Sat Apr 5 , 2025
Paneer occupies an important place on the food list of vegetarians.

You May Like