Fishermens: ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மற்றும் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது.
தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யும் நிகழ்வு அவ்வப்போது அரங்கேறி வருகின்றது. கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் பொழுது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் சார்பாக அறிவிக்கப்படும் நிலையில் ஒரு சிலர் மட்டும் மீன்பிடிக்க சென்று வருகின்றனர் இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கபடகின் மூலம் கடலுக்குச் சென்றார்கள். அப்போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 33 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இரண்டு படகின் மூலம் சென்ற 18 மீனவர்களும் இன்று அதிகாலை ஒரு படகின் மூலம் சென்ற 15 மீனவர்கள் என மொத்தம் 33 பேரை சிறைபிடித்து வைத்துள்ளனர். அடிக்கடி இவர்கள் மீனவர்களை சிறைபிடித்து வைப்பதாகவும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் மட்டுமே மீனவர்களை கைது செய்ய வேண்டும் ஆனால் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகை பார்த்த உடனே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யும் சூழலும் அவ்வப்போது நிகழ்வதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Readmore: அஜித்தை வைத்து மாஸ் திட்டம்?. விருது அரசியலை முன்னெடுக்கிறதா திமுக, பாஜக?.