fbpx

SSC தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 17,18 ஆகிய தேதிகளில் தேர்வு…! முழு விவரம்….

மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிக்கு தேர்வு நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 35,557 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் என 13 மையங்கள் / நகரங்களில் 17 இடங்களில் நடைபெற உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..! இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்..! வெளியான முக்கிய அறிவிப்பு

தென் மண்டலத்தில் இத்தேர்வு 17.11.2022, 18.11.2022 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். இந்நாட்களில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை என 3 ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்தும், பிறகு அவரவர் தேர்வு நாள் வரை மட்டும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள தக்க வகையில், பணியாளர் தேர்வாணைய வலைதளத்தில் இருந்து மின்னணு – தேர்வு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள இயலும். இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரூ.12,000 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

Sat Nov 12 , 2022
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார், பரிசாரகர், காவலர், இரவு காவலர், திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 15 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் […]

You May Like