பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. எனவேதான் 01.04.2023 முதல் ஏற்கனவே, அதாவது 08.06.2017 அன்று இருந்த வழிகாட்டி மதிப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டது.
செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ. 40 ஆயிரம், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் என உயர்த்தி தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதே போல, ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ. 4,000 என்பது ரூ.10 ஆயிரம் எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000 என்பது ரூ.40,000 எனவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200 என்பது ரூ.1000 எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்பதை, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவிகிதம் எனவும் மாற்றியமைத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது. அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளது.