fbpx

தூள்..! வருகிறது “ஸ்டார் 3.0” திட்டம்… இனி நீங்க ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்…!

பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டம் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

மேலும் பதிவுத்துறையில் தனித்துவமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி பதிவை எளிமையாக்கும் விதமாக ஸ்டார் 3.0 என்னும் புதிய மென்பொருளில் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்துதல், மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளித்தல், பொதுமக்கள் அலுவலகம் வராமலேயே சேவைகளை பெறுதல், தற்போதைய இணைய தளத்தை புதுப்பித்து எளிமையாக்கல், மென்பொருளை அதிவேகமாக இயங்க வைக்கும்.

2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாஃப்ட்வேரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1895 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்பட உள்ளன. தமிழகத்தில் விரைவில் இந்த மென்பொருள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. எனவே மக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லாமல் ஆன்லைனில் பத்திரங்களை பெற முடியும்.

English Summary

“STAR 3.0” scheme is coming… You don’t have to go to the register office anymore

Vignesh

Next Post

தீ போல பரவும் "ஜிக்கா வைரஸ்"...! கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.!!

Thu Jul 4 , 2024
Zika Virus”...!Pregnant women should be cautious

You May Like