விடுதியில் தங்கையை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,400 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு தலா ரூ.1,100, பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் உணவு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உணவு உதவி தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தப்படும். அதே போல் அரசு கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,100 ல் இருந்து 1,500 ஆக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அடிக்கடி மருத்துவமனைகளை ஆய்வு செய்து, சிகிச்சைகள் குறித்து கேட்டறிய வேண்டும். கல்வி மருத்துவம் இரண்டும். இந்த அரசுக்கு முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றுங்கள். காலை உணவு திட்டம் தொடர்ந்து செயல்படுதத் தனி கவனம் செலுத்த வேண்டும். முதல்வரின் முகவரி துறைகளில் பெறப்படும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் நிர்வாக சிக்கல்கள் உள்ளன. விசாரணை கைதிகளை காணொலி காட்சி மூலம் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.