fbpx

வரும் 10-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை..

வரும் 10-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதே போல் வட தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்றும் கூறப்பட்டுள்ளது..

மேலும் “ இன்று மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.

நாளை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய குழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.

வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், குமரிக்கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. லட்சத்தீவு, கேரள, கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள் இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்... கோர்ட் 79 ஆண்டுகள்‌ சிறைத்தண்டனை விதித்தது..!

Sat Aug 6 , 2022
கேரள மாநிலம் கன்னூரில் இருக்கும் அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருபவர் பி இ கோவிந்தன் நம்பூதிரி(50). இவர் துவக்கப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்து வருகிறார். துவக்க பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம், ஆசிரியர் போர்வையில் தனது கொடூர செயல்களை செய்துள்ளாளார். கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ந்ன்கு சிறுமிகளிடம் பாடம் சொல்லிகொடுப்பது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2014-ஆம் வருடம் முதல் 2015 […]

You May Like