fbpx

கர்நாடகா: “துணிகளை கிழித்து..” மாணவன் தலையில் அம்பேத்கர் படம்.!! பதற வைக்கும் காட்சிகள்.! அதிர்ச்சி வீடியோ.!

கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பள்ளி விடுதி ஒன்றில் மாணவன் அரை நிர்வாணமாக்கப்பட்டு தலையின் அம்பேத்கர் படத்தை சுமந்தபடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் இயங்கி வரும் மாணவர் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஒரு மாணவன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள் விழாவில் கலந்து கொள்ள மறுத்த மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்தை சுமந்தவாறு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்புர்கி நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அசோக் நகர் காவல் துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 341, 323, 504, 505(2), 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

" அடேங்கப்பா.. 80 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான ஆஸ்கர் நாயகன்.." ஆச்சரியத்தில் ஹாலிவுட்.!

Sun Jan 28 , 2024
80 வயதில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை, ஏழாவது மகளின் வருகை என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் புகழ்பெற்ற பாலிவுட் நடிகர், ராபர்ட் டி நீரோ! இதைப் பற்றி சமீபத்தில் AARP என்ற இதழில் அவர் அளித்த பேட்டியில் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்ற, ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர், ராபர்ட் டி நீரோ, தற்போது 80 வயதில் தந்தையாகியுள்ளார். அவர் தற்போது டிஃபனி ஷென் என்பவருடன் […]

You May Like