fbpx

அரசியலில் அடுத்த பரபரப்பு… திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவிப்பு…!

திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள விளக்க குறிப்பில்; 2009 இல்‌ எனது நாடாளுமன்ற உறுப்பினர்‌ பணி காலம்‌ நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும்‌ தேர்தலில்‌ போட்டியிடாமல்‌, கட்சிப்‌
பணிகளை மட்டும்‌ மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர்‌
கலைஞர்‌ அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்‌. தலைவர்‌ கலைஞர்‌ மறைவுக்குப்பின்‌. அவர்களின்‌
விருப்பத்தின்படி தலைவர்‌ தளபதி அவர்களை முதலமைச்சர்‌ ஆக்கும்‌.
நோக்கத்துடன்‌ கழகப்‌ பணிகளை மட்டும்‌ செய்து வந்தேன்‌. 2021 சட்டமன்ற பொதுத்‌ தேர்தலில்‌ கழகம்‌ மகத்தான வெற்றி பெற்று தலைவர்‌ தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று அரசுப்‌
பணிகளையும்‌ கட்சிப்‌ பணிகளையும்‌ நாடே பாராட்டும்‌ வகையில்‌
சிறப்பாகச்‌ செயல்படுத்திக்‌ கொண்டிருக்கிறார்‌.

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத்‌ தருகிறது. இந்த நிறைவோடு
அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்‌ என்ற எனது நீண்ட நாள்‌ விருப்பத்தின்‌ அடிப்படையில்‌ ஆகஸ்டு மாதம்‌ 29-ம் தேதியன்று பதிவியிலிருந்தும்‌, கட்சியிலிருந்தும்‌ விலகுவதாக எனது விலகல்‌ கடிதத்தை தலைவர்‌ தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்‌ என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கும் பிரியங்கா மோகன்..!

Tue Sep 20 , 2022
தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் வரை ஆகச்சிறந்த நடிகராக தடம் பதித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டில் (2022) மாறன், The Grey Man மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய 3 திரைப்படங்களில் இதுவரை வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் 4-வது திரைப்படமாக நீண்ட இடைவெளிக்குப் […]
தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கும் பிரியங்கா மோகன்..!

You May Like