fbpx

திடீர் திருப்பம்.. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்… நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தகவல்..

நிபந்தனைகளை நீக்கினால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இந்த சூழலில் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒற்றை தலைமையை உருவாக்கி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய கோரி உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்… இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரே ஒரு வேட்பு மனுமட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முடிவை நிறுத்திவைக்க பரிந்துரைப்பதாக தெரிவித்தது.. அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடைமுறை தொடரலாம், ஆனால் 24-ம் தேதி வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.. நிலுவையில் உள்ள வழக்கில் மார்ச் 22-ல் விசாரணை நடத்தப்பட்டு, மார்ச் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்.. அதுவரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்..

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.. திமுக உடன் நெருக்கடி காட்டியதாக எளிதான காரணத்தை கூறி என்னை நீக்கி உள்ளனர்.. பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகள் திருத்தபட்டுள்ளன.. என்னை நீக்கிய முறை எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கு விரோதமானது.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது..

உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கூறமுடியாது, அரசியல் கட்சிகள், சங்கங்களோ கிளப்புகளோ அல்ல.. அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தி உள்ளனர்.. எனவே நிபந்தனைகளை நீக்கினால், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்.. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவையும் வாபஸ் பெற தயார்.. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதற்கு கட்சியினரிடம் கருத்து கேட்கப்படவில்லை..” என்று தெரிவித்தார்.. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

இதுவரை நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று கூறி வந்த ஓபிஎஸ், தற்போது திடீர் திருப்பமாக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

ரூ.1 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ஐஸ்வர்யா வீட்டு வேலைக்கார பெண்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Wed Mar 22 , 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனது வீட்டில் இருந்த தங்க நகைகள், வைரம் மற்றும் நவரத்தினத்தின் கற்கள் ஆகியவை காணாமல்போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 2019இல் 3 முறை வீடு மாறிய போதும் லாக்கரில் இருந்த நகைகளை எடுக்கவில்லை எனவும், லாக்கரில் நகைகள் இருந்தது தன் வீட்டு வேலைக்காரர்களுக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

You May Like