தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அண்மையில் அறிவித்தது, அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபகாலாமாக அதிமுக தலைவர்களை விமர்சிப்பது தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருபுறம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம், மறுபுறம் தெளிவாக கூட்டணி இல்லை என்றும் உங்கள் விருப்பப்படி அதிமுக நடந்து கொண்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கூற, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. மேலும் தமிழ்நாடு பாஜகவின் புதிய மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
நேற்றைய தினம் டெல்லி சென்ற அண்ணாமலையிடம் விசாரணை நடத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரவே தொண்டர்களின் பெரிய ஆரவாரத்துடன் கோவை வந்தடைந்தார். மேலும் கோவையில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில் ஜெயராமன், அமுல் கந்தசாமி, வரதராஜ், ஏ.கே செல்வராஜ் ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருப்பது, மேலும் கூட்டணி தொடருமா அல்லது கட்சி தாவல் நடக்கப்போகிறதா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.