fbpx

ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பம்…! வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி தந்தை பெயர் சேர்ப்பு…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனின் பெயரும் குற்ற எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது.

கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திரைமறைவில் இருந்து மூளையாக செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் என்பதை கண்டறிய புலனாய்வு முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனின் பெயரும் குற்ற எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்காக ஆணையை சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்க உள்ளனர்.

English Summary

Sudden twist in the Armstrong murder

Vignesh

Next Post

ஒலிம்பிக்!. வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!. ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்!

Fri Aug 9 , 2024
Olympics! Neeraj Chopra won the silver medal! Pakistan, the player who has achieved a record that no one has touched so far!

You May Like