திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள பல்லடத்தில் அருகே கரைப்புதூரில் பாளையம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி அங்காத்தாள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் (25) என்ற மகன் தொழிலாளியாக உள்ளார். சென்ற மாதம் அங்காத்தாள் திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் தாயின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜெகதீஷ் தாயின் மறைவால் அதிக மனவேதனையுடன் இருந்து வந்திருக்கிறார். இதனிடையே உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லியுள்ளனர். இருந்த போதிலும் மகன் விரக்தியுடனே இருந்துள்ளார்.
விரக்தியில் இருந்ததை தொடர்ந்து ஜெகதீஷ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.மயங்கிக்கிடந்த அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு அக்கம் பக்கத்தினர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததில் , சிகிச்சை பலனின்றி நேற்று ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தந்தை பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.