தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், கூடுதலான பயணிகள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.
வார இறுதி நாட்களான நேற்று தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூருவுக்கும் 1,300 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டது. இன்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.