fbpx

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு..!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னுடைய நாட்டையும், மாநிலத்தையும் முன்னிறுத்தும் பிரதிநிதியாக நான் இருந்தது, மிக மிக பெருமைமிக்க மரியாதைக்குரிய தருணமாக எனக்கு இருந்திருக்கிறது. இந்த நேரத்தில், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் நான் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். மேலும் பிசிசிஐ, உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம், சென்னை ஐபிஎல் குழுமம், பிசிசிஐ-யின் முன்னாள் துணை இயக்குநர் ராஜீவ் ஷகுலா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய ரசிகர்கள் என் மீது வைத்த தொடர் நம்பிக்கைக்கும், அவர்களின் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவிப்பு..!

சக வீரர்களைத் கொண்டாடும் விதம் மற்றும் அவர்களின் வெற்றியைத் தன் வெற்றியாக கொண்டாடும் கிரிக்கெட் வீரர் என்றால், அது நிச்சயம் இந்திய அணியில் `டெக்னிக்கல் கிங்’ சுரேஷ் ரெய்னாதான். ஆனால், அவர் தற்போது ஓய்வை அறிவித்திருப்பது, பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Chella

Next Post

பெண் சப்-இன்ஸ்பெக்டர்; மாமனாரை கொடூரமாக தாக்கிய வைரல் வீடியோ..!

Tue Sep 6 , 2022
டெல்லி, டிபன்ஸ் காலனி காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், அவரது மாமனார் குடும்பத்தினருக்கும் இடையே வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும் அவரது தாயாரும் அவரது மாமனாரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பெண் சப் இன்ஸ்பெக்டரின் தாயை அந்த பெண்ணின் மாமனார் கையால் தள்ள முயற்சித்தார். இதை கண்டு ஆத்திரமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் மாமனாரை சரமாரியாக தாக்கினார். இதை அங்கிருந்த மற்றொரு காவலர் […]

You May Like