fbpx

என்னை சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது..!! காயத்ரி ரகுராம் கலக்கம்!!

பா.ஜ.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கில பலருக்கு உதவி செய்திருக்கின்றேன் பா.ஜ.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியது வருத்தம் அளிக்கின்றத. புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி பொறுப்புகளில் இருந்து காயத்ரி ரகுராமை நீக்கி உத்தரவிட்டிருந்தார். பா.ஜ.க.வில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக செயல்பட்ட காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். அவர் கட்சியின் கட்டப்பரட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டது.

உட்கட்சிபூசல் இப்போது வெட்ட வெளிச்சமாகியள்ளது. கடந்த மே மாதம் புதிய நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் பா.ஜ.கவில் நிர்வாகிகள் பட்டியலை மாநில துணைத் தலைவர் அண்ணாமலைதான் தேர்வு செய்து வெளியிட்டார். மாநில துணைத்தலைவ்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

Next Post

மேகேதாது குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்…

Tue Nov 22 , 2022
காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகேதாது குறித்து விவாதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகின்றது. கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகின்றது. மேகேதாது […]

You May Like