fbpx

#தூத்துக்குடி: மனைவி மீது சந்தேகபட்டு அடித்து கொலை செய்த கணவர்..!

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமாஞ்சி நகரில் இமானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாய் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இமானுவேல் தனது மனைவி கன்னித்தாய்க்கு வேறொரு ஆண் நபருடன் தொடர்பு உள்ளதாக கூறி சந்தேகப்பட்டுள்ளார். 

இதன் காரணமாக பல முறை மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இத‌னிடையே நேற்றைய தினத்தில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த இமானுவேல் மனைவியை ஒரு கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அப்துல்லா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இமானுவேல் அப்துல்லாவை தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

Tue Dec 13 , 2022
கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமான வடகிழக்கு பருவமழை நாட்கள் செல்ல, செல்ல தீவிரமடைந்து கொண்டே வருகின்றது.ஆனால் டிசம்பர் மாதம் இறுதியில் மழை எப்போதும் குறைந்தே இருக்கும், ஆனால் தற்சமயம் அதற்கு எதிர் மாறாக டிசம்பர் மாதம் முடியும் தருவாயில் கூட மழை பெய்த வண்ணம் இருக்கின்றது. சரியாக வடகிழக்கு பருவமழை வருடம் தோறும் முடிவடையும் காலம் வந்ததும், பொதுமக்களிடையே ஒரு நிம்மதிப்பெருமூச்சுவந்தது.அப்பாடா, வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துவிட்டது, இனி பயம் […]

You May Like