fbpx

குளிர் காலத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பாக இருக்கலாம்.? கண்டிப்பாக மருத்துவரை பாருங்கள்.!?

குளிர்காலத்தில் பலருக்கும் அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்ணலாம். ஆனால் குளிர் காலத்தில் சாதாரண சளி, காய்ச்சலை தாண்டி நுரையீரல், இதயம் என பாதிப்பு அதிகமானால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். மேலும் ஒரு சில அறிகுறிகளின் மூலம் மாரடைப்பா இல்லையா என்பதைக் குறித்து அறியலாம் என்று இதய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.

குளிர்காலங்களில் நம் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், சுவாச பாதையில் அதிக சளி உருவாகி மூச்சு அடைப்பு ஏற்படுதல், இதயம் செயலிழந்து போகுதல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் நம் உடலுக்கு தேவையான உடற்பயிற்சியும், வெப்பநிலையும் கிடைக்காமல் போவது தான் முக்கிய காரணம்.

குறிப்பாக இதயத்தை பொறுத்தவரை நம் உடலில் பல்வேறு உறுப்புகளுக்கும் ரத்தத்தை அனுப்பும் வேலையை செய்து வருகிறது. இதயம் ரத்தத்தை உள்ளே இழுத்து வெளியே அனுப்பும் போது இரத்த நாளங்கள் உறைந்து இருப்பது மற்றும் சரிவர இயங்காமல் இருப்பதால் அதிக அழுத்தத்தை போட்டு இதயம் ரத்தத்தை வெளியே அனுப்ப முயற்சி செய்யும். இவ்வாறு முயற்சி செய்யும் போது தான் நம் இதயம் வேகமாக துடித்து மாரடைப்பு ஏற்படுகிறது என்று இதய நிபுண மருத்துவர் தீபேஷ் வெங்கடேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இதற்கான அறிகுறிகளாக சாதாரண நேரத்தில் மூச்சு விட சிரமப்படுதல், திடீரென்று கை மற்றும் கால் பகுதியில் அளவுக்கதிகமான வலி, முதுகு மற்றும் கழுத்து பகுதியில் சேர்ந்தவாறு வலி எடுப்பது, அதிகமான படபடப்பு, வியர்வை போன்றவை முக்கியமான அறிகுறிகளாக கருதப்பட்டு வருகிறது. இந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை சென்று சந்திக்க வேண்டும்.

Rupa

Next Post

அவகோடா சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உடலில் ஏற்படும் தெரியுமா.!?

Sun Jan 21 , 2024
பொதுவாக பழங்கள் என்றாலே அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒன்றாகவே இருந்து வருகிறது. பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருந்து வருகின்றன. இவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்களை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக வெண்ணை பழம் என்று அழைக்கக்கூடிய அவகோடா பழத்தை உண்பதன் மூலம் என்னென்ன சத்துக்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்? அவகோடா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, […]

You May Like