fbpx

நோட்…! தமிழ் புதல்வன் திட்டம்… மாணவர்கள் சந்தேகம் தீர்க்க 14417 ஹெல்ப்லைன் எண்…!

தமிழ் புதல்வன் திட்டம் குறித்த சந்தேகங்களைத் தீர்க்க பள்ளிக் கல்வி உதவி எண் 14417, அதன் சேவைகளை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” ஆகும். அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்தார்

இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக ரூ.1000/- மாதாமாதம் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பாட நூல்கள், பொது அறிவுப் புத்தகங்கள் வாங்குவதற்கு உதவும். இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற. வருமான உச்ச வரம்பை பொருட்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி வகுப்புகளில் பயிலும் ஆண் மாணவர்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களும் பயன் பெறலாம். மாதாந்திர ஊக்கத்தொகை DBT Portal மூலம் வரவு வைக்கப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 6 முதல் 8ம் வகுப்பு வரை RTE ல் பயின்று பின் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன் பெறலாம்.

தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்த சந்தேகங்களைத் தீர்க்க பள்ளிக் கல்வி உதவி எண் 14417, அதன் சேவைகளை நீட்டிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 5, 2024 முதல் பள்ளிக் கல்வி உதவி எண் 14417, 24X7 ஹெல்ப்லைனாக மாற்றப்பட்டுள்ளது.

English Summary

TAMIL BUTULAVAN SCHEME…Students Doubt Clearing 14417 Helpline No

Vignesh

Next Post

உஷார்..!! சிறுமியின் உயிரை பறித்த 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ்..!! உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்த ஆக்‌ஷன்..!!

Tue Aug 13 , 2024
Died due to ill health after drinking Rs 10 Coolrings in Tiruvannamalai.

You May Like