fbpx

ஏய்.. உனக்கு அறிவு இருக்கா? செய்தியாளர் கேள்விக்கு டென்சன் ஆன நடிகர் ஜீவா..!! என்ன விவகாரம்?

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை மலையாளத்தில் பெரிய பூகம்பத்தை கிளப்பிய நிலையில், அடுத்தடுத்து நடிகர்கள் மீதும், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை நடிகைகள் முன்வைத்து வருகின்றனர்.

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக தமிழ் சினிமா நடிகைகள் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் இதுகுறித்து நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.. ஹேமா கமிட்டி அறிக்கை தமிழ் திரையுலகிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் ஜீவா தேனியில் துணி கடை ஒன்றைத் திறந்து வைக்க வந்தபோது, அவரிடம் இது தொடர்பான கேள்வி பத்திரிகையாளர் தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது.

அதற்கு ஜீவா, எனக்கு அதைப் பற்றி தெரியாது. எல்லா துறைகளுமே இது போன்ற புகார்கள் இருக்கிறது. இதற்கு பதில் நான் சொல்லவில்லை என்று சொன்னவுடன், நீங்கள் நடிகர் தானே? என்று மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டிருக்கிறார்கள். உடனே ஜீவா, ஏற்கனவே நான் பதில் கொடுத்து விட்டேன். நல்ல நிகழ்விற்காக வந்திருக்கிறேன். அபசகுனமாக பேசாதீர்கள். நல்லதை மட்டும் பேசுங்கள், கேளுங்கள் என்று கேட்க, தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் விடாமல் ஜீவாவிடம் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு கோபப்பட்ட ஜீவா, உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தெரியாதா? என்று ஆவேசப்பட்டு பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Read more ; Hema Committee Report | தண்டனை கிடைக்க வேண்டும்.. இதுபோன்ற விஷயங்கள் நடக்கும் களம் சினிமா அல்ல..!! – மெளனம் கலைத்த மம்முட்டி

English Summary

Tamil film actresses continue to voice their support regarding the Hema Committee report. But none of the Tamil film actors directly commented on this..

Next Post

புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி விவகாரம்.. 'எனக்கு எதுவும் தெரியாது.!!' சூப்பர் ஸ்டார் இப்படி சொல்லிட்டாரே..!!

Sun Sep 1 , 2024
Actor Rajinikanth said, "I'm sorry, I don't know anything about the Hema Committee report."

You May Like