கட்சித் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் பொது கூட்டங்களை நடத்தி, ஆளும் அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சிதம்பரத்தில் பாஜகவினரின் சார்பாக பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அண்ணாமலையும் வருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் இறுதி நேரத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அவரால் செல்ல இயலவில்லை. அதற்காக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்; நேற்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நலக்குறைவால் என்னால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக தமிழக பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்