சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 5:00 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவையில் புதிதாக கடந்த 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார். மேலும், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத் துறையும், அமைச்சர் மதி வேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் செட்டியார் பழனி தங்கராஜ் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட உள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கடந்த முறை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்தும், இலாகாகள் மாற்றம் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்கள், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்டப்பேரவை தீர்மானங்கள் மற்றும் வரக்கூடிய வருகிற 2023-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பொங்கல் விழாவிற்கு முன்னதாக வைக்கலாமா அல்லது பிறகு வைக்கலாமா அதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியிடலாம் என்பன குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.