fbpx

பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்…! முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாகிஸ்தான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் தனது கடிதத்தில்; தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, கடந்த ஜன.3-ம் தேதி பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ளன. அந்த மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை.

மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

Tamil Nadu fishermen captured by Pakistan Navy

Vignesh

Next Post

TNPSC: ஆய்வாளர் பணிக்கு 957 காலியிடங்கள் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்...!

Thu Nov 21 , 2024
957 vacancies announced for the post of Inspector

You May Like