fbpx

பாலிடெக்னிக் படிக்க மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும்…! தமிழக அரசு அறிவிப்பு..!

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம், இந்த ஆண்டில் இருந்து தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ.50 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநில அரசு ஊழியர்களுக்கும் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதனால், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதை நடைமுறைப்படுத்த ஆண்டுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி செலவிடப்படும். திருமண முன்பணமாக தேவையின் அடிப்படையில் பணிக் காலத்தில் இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது இனிமேல், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு, கிராம பணியமைப்பு உட்பட ‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 4.71 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.24 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு, கிராம பணியமைப்பு உட்பட ‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 4.71 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.24 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். ழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராய ஒரு குழு அமைத்து, அந்த குழு தனது அறிக்கை, பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அடிப்படையில், இந்த குழு தனது அறிக்கை, பரிந்துரையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும்.

திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறுக்காக வழங்கப்பட்ட 9 மாத விடுப்பை, கடந்த 2021 ஜூலை 1-ம் தேதி முதல் ஓராண்டு காலமாக உயர்த்தி, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம், தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுக்கப்படுவது இல்லை. இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு நிதிநிலையில் ஏற்பட்ட பெரும் சுமையால் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஈட்டிய விடுப்பை 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் 2026 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், அரசு ஊழியர்களின் கோரிக்கை அடிப்படையில் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சரண் செய்து பணப் பயன் பெறலாம். இதனால், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கும்.

Read More: மே 1-ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவு…!

English Summary

Tamil Nadu government announces that students will be given Rs. 50,000 to study in polytechnics…!

Vignesh

Next Post

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம்...! சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அதிரடி...!

Tue Apr 29 , 2025
77 district judges transferred across Tamil Nadu...! Madras High Court orders action

You May Like