fbpx

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த வழிவகை செய்ய தமிழக அரசு திட்டம்…!

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த வழிவகை செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள சுமார்‌ 2000 கல்குவாரிகள்‌ மற்றும்‌ சுமார்‌3500 கிரஷர்‌ யூனிட்டுகளில்‌ ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌பணிபுரிந்து வருகின்றனர்‌. தமிழகத்தின்‌ அத்தனை மாவட்டங்களிலும்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌, மெட்ரோ ரயில்‌ பணிகள்‌ மற்றும்‌ அரசுத்‌ திட்டங்களுக்கு, எம்‌.சாண்ட்‌ மற்றும்‌ ஜல்லி கற்கள்‌ வினியோகம்‌, இந்த ஆலைகளை நம்பியே இருக்கிறது.

திறனற்ற திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழகத்தில்‌ தொழிற்துறை பெருமளவில்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு,கல்குவாரிகளும்‌ விதிவிலக்கல்ல. கடந்த சில நாட்களாக, குவாரிகளைப்‌ பார்வையிடுகிறோம்‌ என்ற பெயரில்‌, தேவையற்ற புகார்களைக்‌ கூறி, ஆலை உரிமையாளர்களை அச்சுறுத்துகிறது என்றுகுற்றம்‌ சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள்‌, எம்‌.சாண்ட்‌, ஜல்லி கற்கள்‌ உற்பத்தியை நிறுத்தி விட்டனர்‌.

’பொங்கலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை வாங்க தமிழக அரசு முயற்சி’..! - அண்ணாமலை

இதனால்‌, தமிழகம்‌ முழுவதும்‌, கட்டுமானப்‌ பணிகள்‌ பெருமளவில்‌ பாதிக்கப்பட்டுள்ளன. மேலும்‌, குவாரித்‌ தொழிலைச்‌ சார்ந்துள்ள, லாரி தொழில்‌, கட்டுமானத்‌ தொழில்‌, மற்றும்‌ தொடர்புடைய சிறு சிறு தொழிலாளர்கள்‌, மற்றும்‌ வீடுகள்‌ கட்டிக்‌ கொண்டிருக்கும்‌ ஏழை, நடுத்தர மக்கள்‌ உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர்‌, தங்கள்‌ தினசரி வாழ்வாதாரம்‌ இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கால தாமதமின்றி, குத்தகை உரிமம்‌ வழங்கப்பட வேண்டும்‌. சிறு கனிமங்களுக்கு, சுரங்கத்‌ திட்டம்‌ வழியாக குத்தகை உரிமம்‌ வழங்குவதில்‌ இருந்து விலக்கு அளிக்க வேண்டும்‌. திமுக ஆட்சிக்குவந்ததில்‌ இருந்து தாமதமாகும்‌ குவாரி உரிமம்‌ புதுப்பித்தலை குறித்த காலத்திற்குள்‌ வழங்க வேண்டும்‌. சுற்றுச்‌ சூழல்‌ ஆர்வலர்கள்‌ என்ற‌ பெயரில்‌ உலா வரும்‌ போலி ஆர்வலர்கள்‌ குவாரி உரிமையாளர்களிடம்‌ பணம்‌ கோரி மிரட்டுபவர்கள்‌ மற்றும்‌ அரசுக்குத்‌தொடர்பில்லாமல்‌ பணம்‌ வகுலிப்பவர்கள்‌ மீது நடவடிக்கை வேண்டும்‌.

குவாரி உரிமத்திற்குப்‌ பொருத்தமற்ற விதிமுறைகளிலிருந்து விலக்கு வேண்டும்‌ என பல்வேறு கோரிக்கைகளை குவாரி உரிமையாளர்கள்‌, தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளனர்‌. இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Vignesh

Next Post

மனநிலை சம்மந்தப்பட்ட சிகிச்சைக்கு மேஜிக் காளான்!... 3 வருட ஆலோசனைக்கு பின் ஒப்புதல் அளித்தது ஆஸி.!

Mon Jul 3 , 2023
உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா, மனநிலை சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க சைகடெலிக்ஸ்-ஐ சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் கண்காணிப்பு அமைப்பான தெரப்யூடிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (TGA) கிட்டத்தட்ட மூன்று வருட ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்கள் PTSD எனும் மனநிலை சிகிச்சைக்கு எக்ஸ்டசி என அழைக்கப்படும் MDMA மற்றும் மேஜிக் […]

You May Like