fbpx

ஆண்டு வருமானம்‌ ரூபாய்‌ 1 இலட்சம் இருந்தால் ரூ.3 லட்சம் வழங்கும் தமிழக அரசின் திட்டம்…! முழு விவரம்

மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டிற்காகவும்‌, மாறி வரும்‌ சூழலுக்கு ஏற்பவும்‌, நவீனசலவையகங்கள்‌ அமைத்திட மேற்கண்ட இன மக்களில்‌ சலவைதொழில்‌ தெரிந்த 10 நபர்களை கொண்ட குழு அமைத்து ரூபாய்‌ 3 இலட்சம்‌ தமிழக அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

தகுதிகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌: விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ இருந்து குழு உறுப்பினாகளின்‌ குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்‌. குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறையின்‌ மூலம்‌ பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட‌ குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல்‌ வேண்டும்‌.குழு உறுப்பினர்கள்‌ சீர்மரபினர்‌ இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. குழுவிலுள்ள பயனாளிகளின்‌ ஆண்டு வருமானம்‌ ரூபாய்‌ ஒரு இலட்சத்திற்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

விருப்பமும்‌, தகுதியும்‌ உடைய மேற்கண்ட இனத்தைச்‌ சார்ந்த குழுவினர்‌ உடன்‌ தங்களது மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில் இயங்கி வரும்‌ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன்‌ விண்ணப்பித்து நிதி உதவி பெற்று பயனடையலாம்.

English Summary

Tamil Nadu government’s scheme to provide Rs. 3 lakh if ​​annual income is Rs. 1 lakh

Vignesh

Next Post

காங்கோவில் போர் மூளும் அபாயம்!. கிளர்ச்சிப் படையினரின் அட்டூழியம்!. சரணடைந்த ராணுவம்!. வெளியேறும் மக்கள்!.

Tue Jan 28 , 2025
The risk of war in Congo!. The atrocities of the rebel forces!. The army surrenders!. The people are leaving!.

You May Like