சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000 வழங்கும் தமிழக அரசு.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் சாப்பிட பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.
திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு) :
பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை) மேலும் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை) வழங்கப்படும்.
கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை).,மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை வழங்கப்படும்.
மேற்காணும் அனைத்து திருமண உதவி திட்டங்களிலும் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.25000/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.25000/- காசோலை) மூலம் அரசால் வழங்கப்படும்.