fbpx

முன்கூட்டியே தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!! தேதியை அறிவித்த சபாநாயகர்..!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதியே தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நெல்லையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கூறிய அவர், ”தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதிக்கு பதில் ஜூன் 20ஆம் தேதியே தொடங்கவுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால், பேரவை முன்னதாகவே தொடங்கப்படுகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்காக ஜூன் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற தாரகை கத்பட் நாளை (ஜூன் 12) காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். நாளைய தினம் சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.

Read More : அமைச்சர் செஞ்சி மஸ்தான் முக்கிய பொறுப்பில் இருந்து விடுவிடுப்பு..!! திமுக தலைமை அறிவிப்பு..!!

English Summary

Tamil Nadu Assembly Speaker Appavu has announced that the session of the Tamil Nadu Legislative Assembly will begin on the 20th.

Chella

Next Post

BREAKING | விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்..!! திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு..!!

Tue Jun 11 , 2024
Aniyur Siva has been announced as the DMK candidate in the Vikravandi by-election.

You May Like