fbpx

TANGEDCO | தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை!! 500 பணியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை நிறுவனமனான தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (tangedco) 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

1. எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 395 பணியிடங்கள்
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் – 22 பணியிடங்கள் 
3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் – 9 பணியிடங்கள் 
4. கணினி பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 9 பணியிடங்கள்
5. சிவில் இன்ஜினியரிங் – 15 பணியிடங்கள்
6. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் – 50 பணியிடங்கள்

கல்வி தகுதி ;

இந்த வேலைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு டிப்ளமோ இன் ஜினியரிங் அல்லது டெக்னாலஜி அல்லது இது தொடர்புடைய படிப்பை முடித்திருக்க வேண்டும். 
2020 முதல் 2023 பேட்சில் முடித்திருக்க வேண்டும். 

சம்பளம் ;

சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பணி வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நாள் ;

விண்ணப்பிக்க தொடங்கும் நாள் – 10.07.24
விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.07.24

எப்படி விண்ணப்பிப்பது?

http://www.nats.education.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

English Summary

Tamil Nadu Power Distribution Corporation (tangedco), a subsidiary of Tamil Nadu Electricity Board, has issued a notification to fill up 500 posts.

Next Post

'மூளையை உண்ணும் அமீபா!!' தமிழக அரசை அலர்ட் செய்யும் எடப்பாடி பழனிசாமி!!

Sun Jul 7 , 2024
Three people have died due to brain damage due to the spread of amoeba bacteria in the state of Kerala. My deepest condolences to the bereaved families.

You May Like