தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட உள்ளது. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் வரும் ஏப்.21ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் ஏப்.17ம் தேதியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
தென் மாநிலங்கள் உட்பட சில வட மாநிலங்களிலும் தற்போதே வெயில் கொளுத்தி வருகிறது. வழக்கமாக மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயில் மண்டையை பிளக்கும் அளவுக்கு உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குழந்தைகளும் வயதானவர்வளும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வெயிலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகளில் கோடை விடுமுறை வெயிலின் தாக்கத்தை பொறுத்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட உள்ளது. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் வரும் ஏப்.21ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் ஏப்.17ம் தேதியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.