fbpx

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..!! மீனவர்களுக்கும் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (12.09.2024 மற்றும் 13.09.2024) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல், வரும் 14 முதல் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 – 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்தப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ரேஷன் அட்டைதாரர்களே..!! இந்த தேதியை மறந்துறாதீங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

English Summary

Tamil Nadu is likely to receive rain for the next two days, according to the Meteorological Department.

Chella

Next Post

'விஜயதரணி காங்கிரசில் இருந்திருந்தால் பெரிய தலைவலியாக இருந்திருப்பார்’..!! ’அவர் போனதே நல்லது’..!! விளாசிய ஈவிகேஎஸ்..!!

Thu Sep 12 , 2024
"Vijayadharani's departure from the Congress party is good for our party," said EVKS Ilangovan.

You May Like