fbpx

மது பிரியர்களே… தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி டெட்ரா பேக் அறிமுகம்…!

தீபாவளிக்கு டாஸ்மாக் நிர்வாகம் 90 மில்லி டெட்ரா பேக் திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சட்டப்பூர்வ கொள்முதல் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒரே ஏஜென்சி 90 மில்லி மது பாட்டில்களை விற்க அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் தற்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் சூழ்நிலையில் தமிழ்நாடு இல்லை என்று அமைச்சர் முத்துச்சாமி சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

சில அண்டை மாநிலங்கள் டெட்ரா பாக்கெட்டுகளில் குறைந்த அளவிலான மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது, டாஸ்மாக் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மதுபான உற்பத்தியாளர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, டாஸ்மாக் நிறுவனம், இந்த ‘கட்டிங்’ பாட்டில்களின் விலை நிர்ணையம் குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி, 90 மில்லி பிராண்டின் விலை சுமார் 80 ஆக இருக்கலாம் (180ml பாட்டில், இப்போது கிடைக்கும் சிறியது, விலை சுமார் 140 ஆகும்).

அநேகமாக, இந்த தீபாவளிக்கு 90 மில்லி பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மது உற்பத்தியாளர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் கால அவகாசம் கோரியுள்ளனர்,” என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

English Summary

Tasmac launches 90ml Tetra Pack in stores for Diwali

Vignesh

Next Post

விக்கிரவாண்டி தேர்தல்... திமுகவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்...! தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற அன்புமணி...!

Thu Jul 4 , 2024
The vetti kept by the DMK as a bribe for the vote were confiscated.

You May Like