fbpx

அதிரடி… 3 மாதத்தில் TASMAC கடைகளை மூட வேண்டும்… உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு…!

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை 3 மாதத்தில் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடச்சபுரத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்ததார். அதில் சாத்தான்குளம் தாலுகா முதலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு உள்ளாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஊராட்சிமன்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், ஏற்கனவே கடை அமைந்த இடத்திற்கு எதிரே கடை திறந்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகளை அமைப்பது சட்டவிரோதமானது. எனவே, தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்,” என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது சபிக் அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை வைப்பதற்காக தேர்வு செய்யப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். மேலும் மூன்று மாதங்களுக்குள்ளாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

English Summary

TASMAC shops to be closed in 3 months… High Court

Vignesh

Next Post

தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு... தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்..!

Sat Sep 7 , 2024
Private Medical College Administrative Allotment...should be allotted to students of Tamil Nadu

You May Like