fbpx

அதிரடி…! வரியை இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்…! 15-ம் தேதி முதல் அமல்…! தமிழக அரசு அறிவிப்பு…!

2022-2023ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்‌ தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணைய வழியின்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ அனைத்து வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை இணையதளத்தின்‌ மூலமாக வீட்டு வரி மற்றும்‌ சொத்து வரியினை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய மென்பொருள்‌ பயிற்சி அளித்தல்‌ தொடர்பாக செங்கல்பட்டு . கடலூர்‌, ஈரோடு.மதுரை, திருப்பத்தூர்‌ மற்றும்‌ வேலூர்‌ ஆகிய ஆறு மாவட்டங்களில்‌ மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட தலா ஓர்‌ ஊராட்சியில்‌ . இப்பொருள்‌ தொடர்பாக கிராம ஊராட்சி செயலர்‌ மற்றும்‌ ஒரு கணினி இயக்குபவர்‌ ஆக இரு பணியாளர்களுக்கு மென்பொருள்‌ குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வரியினங்களை இணையவழி செலுத்துவதற்குரிய மென்பொருளைக்‌ கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்‌ தொடர்ந்து மாவட்டங்களில்‌ பணியாற்றும்‌ உதவி இயக்குநர்‌ (ஊராட்சிகள்‌, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்‌, ஊராட்சி செயலர்‌, மாவட்ட மேலாண்மை அலுவலர்‌ ஆகியோருக்கு விரிவான முறையில்‌ பயிற்சி அளிக்கப்பட்டு. நிகழ்‌ நேர பரிசோதனை நடத்தி சரிப்பார்க்கப்பட்டது.

இதே வகையில்‌ மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம்‌ தேர்வு செய்யப்பட்ட 37 ஊராட்சிகளிலும்‌ பின்னர்‌ வட்டாரத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம்‌ 388 ஊராட்சிகளில்‌ பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியாக தமிழகம்‌ முழுவதற்கும்‌ படிப்படியாக பயிற்சி அளிக்கப்பட்டு வரிகேட்பு குறித்து பதிவேடுகளில்‌ உள்ள பதிவுகள்‌ சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில்‌ உள்ளீடு செய்யப்பட்டு, அவ்வாறு உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள்‌ மீண்டும்‌ ஒருமுறை சரிபார்க்கப்பட்டது.

தற்போது, தேசிய தகவலியல்‌ மையத்தால்‌ நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்‌ மென்பொருள்‌ நிறுவப்பட்டுள்ளது. இதனைப்‌ பயன்படுத்தி கீழ்காணும்‌ விவரப்படி ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையின்‌ இணையதளம்‌ வழியாக வரியினங்கள் செலுத்தப்படுவதை கிராம ஊராட்சி அளவில்‌ பயன்படுத்திட ஏதுவாக பல்வேறு படிநிலைகளில்‌ பயன்பாட்டுக்கு செயல்படுத்திட வேண்டும்‌. இணையதளத்தைப்‌ பயன்படுத்தி தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்‌ 15.12.2022 முதல்‌ வரியினங்கள்‌ வசூலிப்பதை பயன்படுத்தி நடைமுறைப்படுத்திட வேண்டும்‌.

Vignesh

Next Post

மீண்டும் ஒரு புயல்...! உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை..‌.! எல்லாம் உஷாரா இருங்க...!

Wed Dec 14 , 2022
கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இதன் காரணமாக இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 […]
நெருங்கும் ’மாண்டஸ்’ புயல்..!! பொதுமக்களே கவனம்..!! சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!!

You May Like