உணவு கூட வேண்டாம், ஒரு கப் டீ இருந்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு டீ வெறியர்கள் பலர் உள்ளனர். இவர்களால் டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. ஒரு சில ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது டீ குடித்து விடுவார்கள். இதற்காக ஒரு சிலர் மொத்தமாக டீ போட்டு வைத்துக்கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் சூடுபடுத்தி குடிப்பார்கள். ஆனால் அப்படி டீயை பல முறை சூடுபடுத்தி குடிப்பது நல்லதா? நிபுணர்கள் பரிந்துரைப்பது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
நிபுணர்கள் அறிவுறுத்தலின் படி, டீயை அடிக்கடி சூடுப்படுத்தி குடிப்பதினால் உடலுக்கு பல தீமைகள் நேரிடும். அந்தவகையில் தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். டீயை சூடுபடுத்தும் போது, தேயிலைகளில் உள்ள டானின் செறிவை அதிகரிக்கிறது, மற்ற உணவுகளிலிருந்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கிறது.
மேலும், டீயை அதிகம் சூடுபடுத்துவதால் அமிலத்தன்மை அதிகரித்து வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆம், டீயை பாலுடன் சேர்த்து அதிகம் கொதிக்கவைக்கும் போது, நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்று அசௌகரியங்கள் அதிகம் ஏற்படுகிறது. மேலும், இதனால் food poison ஏற்பட அதிக வாய்புகள் உள்ளது. இதனால் முடிந்த வரை, புதிய டீயை தயாரித்து குடிப்பது நல்லது. அப்படி நீங்கள் டீ தயாரிக்கும் போது, தேயிலைகளை 3-5 நிமிடங்கள் மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read more: பயணம் செய்யும் போது வாந்தி அல்லது குமட்டல் வருகிறதா? அப்போ இனி இந்த ஒரு பொருள் போதும்..