fbpx

அதிரடி உத்தரவு…! ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல விடுப்பு அனுமதி பெற வேண்டும்…!

ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல, துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரிடம் விடுப்பு அனுமதி பெற வேண்டும்.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்டோர், மாவட்டக் கல்விஅலுவலர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு பெறவும், புதுப்பிக்கவும் தடையின்மைச் சான்று வழங்க அனுமதித்து 2013-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உண்டு. எனினும், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல, துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரிடம் மட்டுமே விடுப்பு அனுமதி பெறவேண்டும்.

இது சார்ந்த கருத்துருகள் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற வேண்டும். இந்த விவகாரத்தில் 2007-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Teachers must obtain permission to travel abroad

Vignesh

Next Post

தைராய்டு அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள் என்னென்ன? விரிவாக!!

Fri Jun 7 , 2024
தைராய்டு சுரப்பியின் அளவு மிகவும் பெரிதாவதால் தொண்டையின் முன்பக்கத்தில் உண்டாகும் வீக்கம் goitre எனப்படுகிறது. இந்த அறிகுறிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். கழுத்தின் முன்பகுதியில், தொண்டையின் நடுப்பகுதிக்கு சற்று கீழே அமைந்துள்ள முக்கிய நாளமில்லா சுரப்பி தைராய்டு ஆகும். இந்த சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். நம்முடைய வளர்சிதை மாற்ற வேகத்தை சிறப்பாக வைப்பது தைராய்டு ஹார்மோனின் முக்கிய வேலையாக இருக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்கள் […]

You May Like