விழுப்புர மாவட்ட பகுதியில் உள்ள பேரங்கியூரில் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (26) எனபவர் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது நிறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பெண்ணை உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் பிரபாகரன் காரணம் என்று தெரியவந்துள்ளது. புகாரின் பேரில் காவல்துறையினர் பிரபாகரனை கைது செய்தனர். இந்த நிலையில் விழுப்புரம் பகுதியில் உள்ள மகிளா கோர்ட்டில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பானது அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.