fbpx

அவர் சபாநாயகராக இருந்தா நாங்கள் பதவியேற்க மாட்டோம்…! பாஜக MLA-க்கள் அதிரடி முடிவு…!

தெலுங்கானாவில், ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டார், பாஜக எம்எல்ஏக்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தது மட்டுமல்லாமல், அவர் முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் புறக்கணித்த சம்பவம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஒவைசி ஆட்சியில் புதிய சபாநாயகர் தேர்தல் நடக்கக் கூடாது என்று தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் கோஷாமஹால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் பாஜக எம்எல்ஏக்கள் யாரும் பதவி ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். தற்காலிக சபாநாயகர் நியமனம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; உயிருள்ள காலம் வரை நான் ஏஐஎம்ஐஎம் முன்பு பதவி ஏற்றுக்கொள்ளமாட்டேன். முழுநேர சபாநாயகர் நியமிக்கப்பட்ட பின்னர் நான் பதவி ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இந்துக்களுக்கு எதிராக கருத்துக்கள் கூறிய நபர் அக்பருதீன் ஒவைசி எப்படி நான் பதவி ஏற்றுக்கொள்ள முடியும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது முன்னவர் கேசிஆரைப் போல ஏஐஎம்ஐஎம் கட்சிக்குக்கு பயப்படுகிறார். அதனால் அக்பருதீன் ஒவைசியை தற்காலிக சபாநாயகராக நியமிக்க அனுமதித்துள்ளார். பேரவையில் உள்ள மூத்த உறுப்பினரையே தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது மரபு. ஆனால் புதிய முதல்வர் சிறுபான்மையினரையும் ஏஐஎம்ஐஎம் கட்சியையும் சமாதானம் செய்யவே அக்பருதீனை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளார் என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

அபராதம் இல்லாத மின்சார கட்டணம்.! அரசின் புதிய அறிக்கையால் தொழில் முனைவோர் நிம்மதி.!

Sun Dec 10 , 2023
மின்சாரக் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு தொழில்துறைக்கும் பொருந்தும் என மின்சார அமைச்சர் புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இது தொழில் முனைவோரிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இந்தப் புயலின் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர். இன்னும் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இந்நிலையில் புயல் பாதிப்பை […]

You May Like