கட்டிட கூலித் தொழிலாளி ஒருவர், மதுரை கண்ணனேந்தல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது 17 வயது மகள் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபி.குளம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென ரம்யா வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சம்பவம் குறித்து, மருத்துவமனை நிர்வாகம் மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து,பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, கண்ணனேந்தல் பகுதியிலுள்ள தனியார் கோயில் பூசாரி தான் இதற்க்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, 48 வயதான அந்த பூசாரியை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “மாணவியின் வறுமையை பயன்படுத்தி படிப்புக்கு பண உதவி செய்வதாக கூறி, மாணவியை கோயிலுக்கு பூசாரி அழைத்துள்ளார். விடுமுறை நாட்களில் கோயிலுக்குச் சென்ற மாணவியை கோயிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணியை செய்ய வைத்துள்ளார். மேலும், மாணவி தனியாக இருக்கும் போது, பூசாரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த பூசாரி, இன்னும் சில மாணவிகள், பெண்களிடமும் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் விசாரணை முடிவில் ‘போக்சோ ‘சட்டத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது”என்று கூறியுள்ளனர்.
Read more: 3 வருடத்திற்கு முன் நடந்த விவாகரத்து; கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகையின் புகைப்படம் வைரல்!