fbpx

முடிவுக்கு வந்த போக்குவரத்துத்துறை – காவல்துறை பஞ்சாயத்து..!! கட்டிப்பிடித்து சமாதானம் ஆன போலீஸ் – நடத்துனர்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துத்துறை – காவல்துறைக்கு இடையே நடந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி பகுதியில், காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்ற வீடியோ வைரலானது. இந்நிலையில், போக்குவரத்து போலீசார் விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை துவங்கினர். நாகர்கோவிலில் இருந்து நெல்லை – நாங்குநேரி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்தில் காவல்துறை டிக்கெட் எடுக்க தேவையில்லை என காவலர் மறுத்ததாகவும், அரசுப் பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் பணி நிமிர்த்தமாக பயணிக்கும் போது டிக்கெட் எடுக்க தேவையில்லை எனவும் காவலர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என காவலர் கூறினார். அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும் என நடத்துனர் எடுத்துக் கூறியிருக்கிறார். இதையடுத்து, பேருந்து அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டது. ஒரு கட்டத்தில் பயணிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் காவலர் டிக்கெட் எடுக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பேருந்து அங்கிருந்து சென்றது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை எடுத்த நடத்துனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்தது.

இந்நிலையில்தான், விதிகளை மீறும் அரசுப் பேருந்துகள் மீது, அபராதம் விதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட ஆரம்பித்தனர். இதையடுத்து, போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்து மீது அபராதம் விதித்து சம்பவமானது, பழிக்கு பழி சம்பவமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் பிரச்சனையை கிளப்பிய நடத்துநர் மற்றும் காவலர் சமரசமாகினர். இருவரும் டீ குடித்து, கட்டிப்பிடித்து சமரசம் செய்து கொண்டனர்.

Read More : ஆசிரியர்களே..!! சொந்த ஊரில் பணியாற்ற வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்னும் சில மணி நேரம் தான் இருக்கு..!!

English Summary

The conflict between the Transport Department and the Police in Tamil Nadu for the past few days has come to an end.

Chella

Next Post

திடீரென நடந்த மோதல்..!! நக்சலைட்டு ஒருவர் சுட்டுக்கொலை - 'அதிரும் சத்தீஸ்கர்!!'

Sat May 25 , 2024
சுக்மா மாவட்டத்தில் உள்ள கோண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெல்போச்சா கிராமம் அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து சுக்மா எஸ்பி கிரண் சவான் கூறுகையில், “சுக்மா மாவட்டத்தில் உள்ள கோண்டா பிஎஸ் எல்லைக்குட்பட்ட பெல்போச்சா கிராமத்திற்கு அருகே பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு […]

You May Like