இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பணிச்சரிவில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பகுதியில் சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகின்றது. ஆங்காங்கே பனிச்சரிவும் ஏற்படுகின்றது. நேற்று எல்லைக்கட்டுப்பாட்டு கேடு அருகே குப்வாரா மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் ராணுவ படையினர் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். பிறர் தப்பிய நிலையில் 3 ராணுவ வீரர்கள் மட்டும் காணவில்லை. இதையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சக ராணுவ வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரணுவ வீர்கள் 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்களை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் யார்? எந்த ஊர்? என்பது பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில்,’’மாச்சில் செக்டாரில் பணியில் இருந்தபோது 3 ராணுவ விரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிர்த்தியாகம் செய்துள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். நேரு மலை ஏற்ற பயிற்சி பள்ளியில் பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பனிச்சரிவில் உயிரிழந்தனர். தற்போது காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.