தென்மேற்கு டெல்லியில் இருக்கின்ற ஆர் கே புரம் அம்பேத்கர் பஸ்திக்கு நேற்று அதிகாலை 4️ மணி அளவில் ஆயுதமேந்திய 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் வந்து லலித் என்பவரின் வீட்டின் கதவை தட்டி கதவின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, கதவை திறந்து வெளியே வந்த லலித் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேர் உள்ளிட்டோரை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டு உள்ளது. இதில் லலித்தின் சகோதரிகளான பிங்கி(30) மற்றும் ஜோதி(29) உள்ளிட்டவர்களின் மார்பிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்து அவர்கள் அதே இடத்தில் சரிந்து விழுந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை நினைத்து மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேருமே உயிரிழந்தனர் பாய்ந்தது இதில் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பி இருக்கிறார்.
பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து அந்த பகுதியை சேர்ந்த தேவ் என்ற நபருக்கும், லலித்துக்கும் வெகு நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது 10000 ரூபாய் கடனுக்காக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என்பது காவல்துறையினரின் விசாரணைகள் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அர்ஜுன், மைக்கேல் மற்றும் தேவ் உள்ளிட்ட 3️ பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, மற்ற குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், அந்த பெண்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் இன்று சம்பவத்தால் டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பின்மையை உணர தொடங்கியுள்ளனர் சட்டம் ஒழுங்கு ஆம் ஆத்மி அரசின் கீழ் இருந்திருந்தால் டெல்லி மிகவும் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.