உலகிலேயே மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக விளங்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாகவும், ஆட்களை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள், வீடுகளில் கடந்த வருடம் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக தடை விதித்தது. அதோடு சென்னை மதுரை தேனி போன்ற 6 பகுதிகளில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் ஒலித்தவை பறிமுதல் செய்யப்பட்டனர்.
டெல்லியில் இருந்து வருகை தந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை, சேர்ந்த அப்துல் ரசாக் (47) மதுரை முகமது யூசுப் (35), முஹம்மது அப்பாஸ் (45), திண்டுக்கல் கைசர் (45), தேனி சாதிக் அலி (39) உள்ளிட்டோரை கைது செய்தனர். இவர்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பாடுகளில் ஈடுபட்டதும் ஆயுதங்களை கையாள்வது தொடர்பாக இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய பலனாய்வு முகமை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். அவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிபதி இளவழகன் அனுமதி வழங்கி இருக்கிறார். அதோடு வரும் 6ம் தேதி மறுபடியும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, 5 பேரையும் தனி இடத்தில் வைத்து என்னையே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆயுத பயிற்சி வழங்கியதாக சொல்லப்படும் இனங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.